கொரோனா கட்டுப்பாடுகள் வாபஸ்..! எங்கு தெரியுமா..?

இங்கிலாந்தில் புதிய வகை ஓமைக்ரான் வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் முதல் தளர்த்தப்படும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். 

கடந்த இரண்டு வருடமாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி  வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டின் அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓமைக்ரான் வகை வைரஸ் ஆனது இங்கிலாந்திலும் அதிக அளவில் பதிவாகி வருகிறது. அங்கு இந்த வகை வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் சில கட்டுப்பாடுகளை அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் முதல் தளர்த்தப்படும் என்றும் வீட்டிலிருந்து பணிபுரிந்தவர்கள் இனி வீட்டில் இருந்து வேலை செய்வதற்கான தேவையில்லை என்றும், கட்டாய முகக்கவசம் உட்பட கொரோனா நடவடிக்கைகள் அனைத்தும் அடுத்த வாரம் முதல் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.