நாடு முழுவதும் எந்தெந்த மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகம்.!

நாடு முழுவதும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக மகாராஷ்டிரா தான் முதலிடத்தில் உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,787 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 1008 ஆகவும் உயர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் 7,797 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 9,318 பேர் பாதிக்கப்பட்டு, 400 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,388 ஆக உள்ளது.

இதையடுத்து, குஜராத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,774 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 181 ஆகவும் உள்ளது. டெல்லியில் பாதிப்பு 3,314, உயிரிழப்பு 54, மத்திய பிரதேசத்தில் 2,561 பேர் பாதிக்கப்பட்டு, 119 பேர் பலியாகியுள்ளார்கள். ராஜஸ்தானில் 2,364 பேர் பாதிக்கப்பட்டு, 51 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் 2,162 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 27 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்