உலகம் முழுக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியது!

சீனாவில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் பெரும்பாலானவற்றை தாக்கியுள்ளது. இந்த கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 700க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல உலகம் முழுக்க கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 6 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும், இந்த எண்ணிக்கையில் அமெரிக்கா 1,04,256 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்து முதலிடத்தில் உள்ளது.

உலகம் முழுக்க கொரோனா தொற்று ஒரு வாரத்தில் இருமடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை 27,417 பேர் கொரோனாவிற்கு பலியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.