இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது.! பலி எண்ணிக்கை 27 ஐ எட்டியது.!

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி சுமார் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. நாளுக்கு நாள் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது, பாதிப்பும் உயர்ந்து வருகிறது. உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,162 ஆக அதிகரித்துள்ளது. பாதித்தவர்களின் எண்ணிக்கை 6,83,932 ஐ எட்டியுள்ளது. இருப்பினும், வைரசால் பாதிக்கப்பட்ட 1,46,400 பேர் குணமடைந்துள்ளனர் என உலக சுகாதாரத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சீனாவில் தொடங்கிய வைரஸ் தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 909 இருந்த நிலையில், தற்போது 1024 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட மாநிலம் மகாராஷ்டிரா 186, கேரளா 182 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வைரஸிலிருந்து 95 குணமடைந்துள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்