ஒரு வாரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 23% சரிவு…! அறிக்கை வெளிட்ட WHO….!

கடந்த 7 நாட்களில் இந்தியாவில் 18 லட்சத்து46 ஆயிரத்து 55 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டனர். இது 23 சதவீதம் குறைவாகும் என WHO தெரிவித்துள்ளது. 

உலக சுகாதார நிறுவனம், கடந்த ஒரு வாரத்தில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 23% சரிந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. மே 25ம் தேதி முடிந்த வாராந்திர உலகளாவிய தொற்று நோய் குறித்த அறிக்கையில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில், கடந்த ஒரு வாரத்தில் உலகளவில் கொரோனவில் புதிதாக பாதிக்கப்படுவோர், உயிரிழப்போர் எண்ணிக்கை சரி்ந்துள்ளது. உலகளவில் புதிதாக 41 லட்சம்பேர் புதிதாக தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 84 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றில் 14 சதவீதமும், உயிரிழப்பில் 2 சதவீதமும் முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில் குறைந்துள்ளது.

இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் பி.1.617 வகை வைரஸ் தற்போது உலகளவில் 53 நாடுகளுக்குப் பரவியுள்ளது. இந்த வகை வைரஸ்கள் மூன்று வகைகளாக உள்ளன. பி.1.617.1, பி.1.617.2, பி.1.617.3 ஆகிய பிரிவுகளில் உள்ளன.

பி.1.617.1 வகை வைரஸ்கள் 41 நாடுகளிலும், பி.1.617.2 வகை உருமாற்ற வைரஸ் 54 நாடுகளிலும், பி.1.617.3 வகை வைரஸ் 6 நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன. இதில் பி.1.617 வகை உருமாற்றம் அடைந்த வைரஸ் கவலைக்குரியதாக இருக்கிறது. இந்த வகை வரைஸ் அதிகமாகப் பரவும் சக்தி கொண்டதாகவும், நோயின் தீவிரத்தை அதிகப்படுத்தும், மீண்டும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது போன்றவை குறித்து தீவிர ஆய்வில் இருந்து வருகிறது.

கடந்த 7 நாட்களில் இந்தியாவில் 18 லட்சத்து46 ஆயிரத்து 55 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டனர். இது 23 சதவீதம் குறைவாகும். பிரேசிலில் 4.51 லட்சம் பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகினர். இது 3 சதவீதம் குறைவாகும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாகக் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, கடந்த 44 நாட்களுக்குப் பிறகு 2 லட்சத்துக்கும் கீழ் குறைந்து 1.86 லட்சம் பேருக்கு புதிதாகக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து, 3,660 ஆக பதிவாகியுள்ளது.