ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்த கொரோனா நோயாளி குடும்பத்திற்கு 5 லட்சம் இழப்பீடு – டெல்லி அரசு!

oxygen55

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் வரை இழப்பீடு தொகை வழங்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நள் நாடு முழுவதும் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் டெல்லியிலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுவதால், அங்கு தீவிரமான ஊரடங்கும் அமல்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. மேலும், தற்பொழுது ஆக்சிஜன் பற்றாக்குறை சற்றே அங்கு குறைந்திருந்தாலும், டெல்லியில் பல நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவும் உயிரிழந்துள்ளனர்.

ஏற்கனவே டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 50000 நிவாரண நிதி வழங்கப்படும் எனவும், பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு 25 வயது வரை 2500 ரூபாய் மாத ஊதியமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிரந்தது. மேலும்  குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் அல்லது குடும்ப தலைவர் கொரோனாவால் மரணம் அடைந்திருந்தால் அந்த குடும்பத்திற்கு 2500 மாதம் ஓய்வூதியமாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.

கணவரும் இறந்திருந்தால் மனைவிக்கு 2500 ரூபாய் ஓய்வூதியம், மனைவி இறந்திருந்தால் கணவருக்கு 2500 ரூபாய் ஓய்வூதியம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் டெல்லி மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவும் உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்பட்டுள்ள  நிலையில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் இழப்பீடு தொகையாக வழங்கப்படும் எனவும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.