அமெரிக்காவில் படிப்படியாக குறையும் கொரோனா பலி எண்ணிக்கை!

அமெரிக்காவில் படிப்படியாக குறையும் கொரோனா பலி எண்ணிக்கை.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளதால், இந்த வைரஸை அழிப்பதற்கு, உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. 

இந்நிலையில், கொரோனா வைரஸால் இதுவரை உலக அளவில்,  7,990,007 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  435,493 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ள நிலையில், இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால் அங்கு, 2,162,144 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  117,853 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், இந்த கொரோனா பாதிப்பால் நேற்று மட்டும் அமெரிக்காவில், 326 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த நாட்களை விட நேற்று பலி எண்ணிக்கை குறைவாக தான் உள்ளது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.