இது சைக்கிள் அல்ல.! பைக்.! 9ஆம் வகுப்பு மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு.!

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவன் அர்ஷாத் சைக்கிள் மாடலில் ஒரு புதிய பைக்கை கண்டுபிடித்து உள்ளான்.

தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளது. இதனால், வீட்டில் இருக்கும் மாணவர்கள் பலர் தங்களுக்கு ஆர்வமான துறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவனான அர்ஷத் ஒரு புதிய கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளார். அதுவும் கடந்த ஒன்றரை மாதத்தில்.!

அர்ஷாத் தந்தை அதே பகுதியில் பைக் ஒர்க் ஷாப் வைத்துள்ளார். அங்கு கிடைக்கும் பொருள்களை கொண்டு அர்ஷாத் கடந்த ஒன்றரை மாதமாக ஒரு சைக்கிளை பைக்-ஆக  மாற்றி வடிவமைத்துள்ளார். அந்த பைக்கில் ஒரு லிட்டர் பெட்ரோல் ஊற்றினால் 50 கிலோமீட்டர் வரை செல்லும் என அவரே குறிப்பிடுகிறார். அந்த சைக்கிளில் பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி பல்புகள், இன்ஜின் என தேவையான அனைத்தும் பொருத்தப்பட்டுள்ளது. இதற்காக அர்ஷத் பத்தாயிரம் ரூபாய் வரையில் செலவு செய்துள்ளாராம். 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.