ஒரே நாளில் 3.82 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு – மத்திய சுகாதார அமைச்சகம்

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,06,65,148 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு.

இந்தியாவில் ஒரே நாளில் 3,82,315 பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் 3.68 லட்சம், நேற்று 3.57 லட்சகமாக இருந்த பாதிப்பு இன்று 3.82 லட்சமாக அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு 2,02,82,833 லிருந்து 2,06,65,148 ஆக உயர்ந்துள்ளது.

அதுபோல, ஒரே நாளில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் 3,780 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை பலியானோர் எண்ணிக்கை 2,22,408 லிருந்து 2,26,188 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் 3,38,436 பேர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,66,13,292 லிருந்து 1,69,51,731 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் விகிதம் 81.91% ஆகவும், உயிரிழப்பின் விகிதம் 1.10% ஆகவும் உள்ளது. நாடு முழுவதும் 34,87,229 பேர் கொரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒரே நாளில் 40,096 பேர் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்