மக்களை காங்கிரஸ் தவறாக வழி ந‌டத்துகிறது – நிர்மலா சீதாராமன்.!

  • ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் மக்களை சந்தித்து குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். 
  • குடியுரிமை சட்டத் பிரச்சனையில் காங்கிரஸும் பிற எதிர்க்கட்சிகளும் மக்களை தவறாக வழிநடத்தி வருகிறது.

தற்போது நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.மத்தியில் ஆளும் பாஜக அரசு குடியுரிமை சட்ட மசோதாவை இரு அவையிலும் நிறைவேற்றியது.

இதனால் காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகள் பாஜகவிற்கு எதிராகவும் , குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் போராட்டங்களை நடத்தி வருகிறது. இதில் வட மாநிலங்களான டெல்லி , உத்தர பிரதேசம் ,மேற்குவங்காளம் மற்றும் அசாம் போன்ற மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்து வன்முறையாக மாறியது.

இதைத்தொடர்ந்து தற்போதும் சில இடங்களில் போராட்டங்கள் நீடித்துக் கொண்டே வருகிறது. இது ஒருபுறமிருக்க குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றிய பாரதிய ஜனதா கட்சி ஒருபுறம் குடியுரிமை சட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் மக்களை சந்தித்து குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெய்ப்பூரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது குடியுரிமை சட்டத் பிரச்சனையில் காங்கிரஸும் பிற எதிர்க்கட்சிகளும் மக்களை தவறாக வழிநடத்தி வருகிறது. பாகிஸ்தானிலிருந்து கடந்த ஆறு ஆண்டுகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தியா வந்துள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள் தான், அவர்களுக்கு இந்தியா குடியுரிமை வழக்கியுள்ளது என கூறினார்.

author avatar
murugan