இலங்கையில் இனப்படுகொலை செய்தது காங்கிரஸ் கட்சி தான் – வைகோ ஆவேசம்!

சென்னை உயர் நீதிமன்றத்தில்ஸ்டெர்லைட் வழக்கு விசாரணை முடிந்து வெளியே வந்த மதிமுக பொது செயலாளர் வைகோ செய்தியர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் தமிழ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதை  பற்றி கேள்விப்பட்டேன் அவர்கள் தயவால் தான் நான் ராஜசபாவுக்கு சென்றதாக தெரிவித்துள்ளார்,அதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன் .

காங்கிரஸ் கட்சி ஆதரவால் தான் நான் சென்றிருப்பதாக காங்கிரஸ் கேஎஸ்.அழகிரி கூறுவது தவறு.அவர், ஆத்திரத்தில் கோவத்தில் என்மீது கொண்ட வன்மத்தில் இப்படி கூறியிருக்கிறார். திமுக வுக்கு 108 MLA க்கள் இருக்கிறார்கள் ஒரு ராஜசபா எம்பி யை தேர்தெடுக்க 34 MLA க்கள் போதும் 3 எம்பிக்களை தேர்ந்தெடுக்க 102 MLA க்கள் போதும்.திமுக என்னை தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ளது ஸ்டாலின் அவர்களும் திமுக MLA க்களும் 10பேர் என்னை பரிந்துரைத்து செய்திருக்கிறார்கள் இதில் ஒருவர் கூட காங்கிரஸ் கட்சி MLA கிடையாது .

என்னை 3 முறை  டாக்டர் .கலைஞர் அவர்கள் திமுக ராஜ்யசபா எம்பி ஆகத்தான் அனுப்பினார் காங்கிரஸ்க்காரர்களிடம் ஓட்டு வாங்கி நான் என்றும் ராஜ்யசபா எம்பியாக செல்லவில்லை. நான் இரண்டு முறை லோக்சபாவில் போட்டியிட்ட பொழுது காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைக்கவில்லை என்றும் வாஜ்பாய் இருக்கும்போது பாஜக கூட்டணியில் தான் போட்டியிட்டுள்ளேன் என்றும்கூறிஇருக்கிறார். மேலும், காங்கிரஸ் தயவில் நான் என்றைக்கும்  எம்பியாக போனதில்லை போகவும் மாட்டேன் என்று ஆவேசமாக தெரிவித்தார் .

நான் காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து வந்தவன் நான் சிறுவனாக இருக்கும் பொழுது காமராஜர் எங்கள் வீட்டில் தான் வந்து தாங்கினார். அப்பொழுது அவருக்காக தான் எங்கள் வீட்டில் குளியலறை கட்டப்பட்டது .ஆனால் நான் மாணவனாக இருந்த பொழுது அண்ணாவின் திராவிட இயக்கத்தில் சேர்ந்தேன் .என்னை நீங்கள் தான் தேர்ந்தெடுத்து ராஜசபா எம்பியாக அனுப்பினீர்கள் என்று சொல்லாதீர்கள் என்று ஆவேசமாக கூறினார் .

மோடியிடம் பேசும்பொழுது உங்களை எதிர்த்து காஷ்மீர் பிரச்சனையில் ஓட்டு போடுவேன் என்றேன் .மன்மோகன் சிங் என்னுடைய வயதை கேட்டுவிட்டு என்னை அவருடைய இளைய சகோதரன் என்றும் அவர் வீட்டுக்கு என் குடம்பத்தினரோடு விருந்துக்கு வர சொன்னார் .அற்பபுத்தி உள்ளவர்களுக்கு எப்படி இது தெரியும் என்று கே.எஸ்.அழகிரி பேசியதற்கு ஆவேசமாக கூறியுள்ளார்.

இலங்கையில் கடந்த 2009 ம் ஆண்டு ராஜபக்சே அரசு  தமிழ் இனத்தை சேர்ந்தவர்கள் மீது நடத்திய இனப்படுகொலையின் போது இந்தியாவில் மத்தியில் இருந்த காங்கிரஸ் கட்சி அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்ததாவும், சுமார் 1,00,000 மக்கள் கொன்று புதைக்க  காங்கிரஸ் கட்சி தான் காரணம் என்றும் வைகோ கூறியுள்ளார்.

author avatar
Dinasuvadu desk