இடைத்தேர்தல் பிரச்சாரம்.! திமுக அமைச்சர் முத்துசாமி தலைமையில் ஆலோசனை.!

minister muthusamy

இடைத்தேர்தல் குறித்து திமுக அமைச்சர் முத்துசாமி தலைமையில் திமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுக சார்பில் அதன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் களமிறங்க உள்ளார். மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா அவர்களின் தந்தை ஈவிகேஎஸ்.இளங்கோவன் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக களம் இறங்க உள்ளார். இதற்கான தேர்தல் பணிகளை திமுக … Read more

நாங்கள் வேட்பாளரை அறிவித்துவிட்டோம்.! மற்றவர்களை பற்றி எங்களுக்கு கவலையில்லை.! அமைச்சர் கே.என்.நேரு பேட்டி.!  

k n nehru

எங்கள் கூட்டணி கட்சி வேட்பாளரை நங்கள் அறிவித்துவிட்டோம்.  அவர்களை ஆதரித்து நாங்கள் தேர்தலுக்கு செல்கிறோம். மற்றவர்களை பற்றி எனக்கு கவலையில்லை. ‘ என கூறிவிட்டு நகர்ந்தார் அமைச்சர் கே.என்.நேரு.  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலை போலவே இந்த இடைத்தேர்தலிலும் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் போட்டியிடுகிறது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பாக மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் … Read more

லாபத்தை பற்றி நினைக்காமல் மக்கள் நன்மை பற்றி யோசித்து முடிவு எடுக்கப்படும்.! கமல்ஹாசன் விளக்கம்.!

KAMALHAASAN

எங்கள் லாபத்தை பற்றி நினைக்காமல் மக்கள் நன்மை பற்றி யோசித்து முடிவு செய்யப்படும். – இடைதேர்தல் குறித்து கமல்ஹாசன் விளக்கம்.  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஈவிகேஎஸ்.இளங்கோவன் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினர். அந்த சந்திப்பு குறித்து கமல்ஹாசன் கூறுகையில், எங்கள் கட்சயின் நிலைப்பாட்டை நான் எடுக்க முடியாது. அந்த நிலைப்பாடு குறித்து அடுத்து நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகளோடு ஆலோசித்து … Read more

காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வைகோ ஆதரவு..!

vaiko

இளங்கோவனை வெற்றி பெற வைப்பதற்கு மதிமுக உறுதுணையாக இருக்கும் என வைகோ பேட்டி.  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் தந்தையுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், மநீம கட்சியின் தலைவர் கமலஹாசன், கூட்டணி கட்சியினரான கம்யூனிஸ்ட் கட்சி, வைகோ, திருமாவளவன் , முஸ்லீம் லீக் கட்சியினரை நேரில் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளதாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், மதிமுக தலைமை அலுவலகத்தில் … Read more

கமல்ஹாசனையும் காங்கிரஸையும் யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது.! ஈவிகேஎஸ்.இளங்கோவன் கருத்து.!

EVKS ILANGOVAN

கமலின் தந்தை காங்கிரஸ்காரர். ஆகவே, காங்கிரஸையும் கமல்ஹாசனையும் யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது. என ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டியளித்தார்.  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கும் ஈவிகேஎஸ்.இளங்கோவன் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வரும் நிலையில், மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசனுடம் ஆலோசனை நடத்தி ஆதரவு கோரினர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கமல்ஹாசனை சந்தித்து திமுக கூட்டணியில் சேர வேண்டும் என அவரிடம் … Read more

ஈவிகேஎஸ் இளங்கோவன் – கமலஹாசன் சந்திப்பு…!

kamal - evks

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆதரவு கோரி, காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் அவர்கள் கமலஹாசன் அவர்களை நேரில் சந்தித்துள்ளார்.  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு  தரக் கோரி காங்கிரஸ் கட்சியை நிர்வாகிகள் கமலஹாசனை சந்தித்து பேசினர். காங்கிரஸ் கட்சியினருடன் ஆலோசனை நடத்திய நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் அவர்கள் கமலஹாசன் அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். இந்த சந்திப்பின்போது கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி விஜயவசந்த், எம் எல் ஏ அசன் மௌலானா, தங்கபாலு, செல்வபெருந்தகை, கோபண்ணா … Read more

#Election Breaking : கமலஹாசனை சந்தித்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்…!

Kamalhasan participate in the Unity Yatra

காங்கிரஸ் நிர்வாகிகள் கமலஹாசனை சந்தித்து, இடைத்தேர்தலில் ஆதரவு கோரியுள்ளனர் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் தந்தையுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடவுள்ளார்.  மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் அவர்களை சந்தித்து ஆதரவு கோர உள்ளதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்திருந்த  நிலையில், காங்கிரஸ் நிர்வாகிகள் கமலஹாசனை சந்தித்து, இடைத்தேர்தலில் ஆதரவு கோரியுள்ளனர்.

கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கேட்கவுள்ளோம்.! – ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டி.!

evks ilangovan

மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் அவர்களையும் , வேல்முருகன் அவர்களையும் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம் என ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் தந்தையுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நான் மற்றும் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் சந்தித்தோம். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருவதற்கு … Read more

திமுக – காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்கும் வேட்பாளர் வேண்டும்.! பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.!

annamalai bjp leader

இடைத்தேர்தல் குறித்து எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவு எடுக்க முடியாது. – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார்.  அவர் கூறுகையில், இன்று உள்ள நிலைமையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் தேர்தலில் நின்றால் கூட மாவட்ட நிர்வாகிகள் அவர் பின்னால் துணை நிற்பார்களா என்பது சந்தேகமே, அவருக்கு மற்ற கட்சியை பற்றி பேச தகுதி இல்லை என விமர்சித்தார் . மேலும், … Read more

‘பரப்புரைக்கு வர முதல்வருக்கு அழைப்பு விடுத்தேன்’ – ஈவிகேஎஸ் இளங்கோவன்

evks ilangovan

முதல்வர் மு.க.ஸ்டாலினை தேர்தல் பரப்புரைக்கு வருமாறு அழைப்பு விடுத்தேன் என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.  பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் எனதேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சியினர் தீவிர முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடவுள்ளார். இதனையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  அவர், முதல்வர் மு.க.ஸ்டாலினை தேர்தல் பரப்புரைக்கு வருமாறு அழைப்பு … Read more