காங்கிரஸ், ராகுல் காந்தியை குறிவைக்கும் பாஜக.. ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு நாள் ஒதுக்கப்பட்டுள்ளது – காங்கிரஸ் .!

கொரோனா வைரஸ், சீனா எல்லை பிரச்சனை , ராஜஸ்தான் அரசியல்  தொடர்பாக காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையிலான கடுமையான வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று காங்கிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது.

அதில், காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியை குறிவைத்து “இன்று யார் கடமையில் உள்ளனர்” என்று கேள்வி எழுப்பி “வீட்டிலிருந்து பி.ஜே.பி வேலை ” என பல்வேறு மத்திய அமைச்சர்கள் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியல் வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கருடன் தொடங்கி, வாரத்தின் ஒவ்வொரு நாளிலும் பிரகாஷ் ஜவடேகர், ஜே.பி.நட்டா, அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் மற்றும் ஸ்மிருதி இரானி ஆகியோர் பெயர்கள் உள்ளன. காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தி ஆகியோரைத் குறிவைக்க ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு நாள் ஒதுக்கப்படுவதாக காங்கிரஸ் கூறியுள்ளது.

இதற்கு முன் ராகுல் காந்தி கொரோனா காலக்கட்டத்தில் பாஜக அரசு செய்துள்ள சாதனைகள் என ஒரு பட்டியல் வெளிட்டார். அதில்,

பிப்ரவரி- நமஸ்தே டிரம்ப்.

மார்ச்-மத்திய பிரதேச அரசைக் கவிழ்த்தது.

ஏப்ரல்-மெழுகு வர்த்தி ஏற்றச்செய்தல்.

மே-அரசின் 6-வது ஆண்டு கொண்டாட்டம்.

ஜூன் – பிகார் மெய்நிகர் பேரணி

ஜூலை-ராஜஸ்தான் அரசைக் கவிழ்க்கும் முயற்சி.

இந்தச் சாதனைகளினால் கொரோனா வைரஸ்சுக்கு எதிரான போரில் நாடு ‘தன்னிறைவு பெற்றது’ என ராகுல் காந்தி விமர்சித்தார்.

இதையடுத்து, மத்திய தகவல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்  ராகுல் காந்தியின் கடந்த 6 மாத கால சாதனைகளை நான் கூறுகிறேன் பட்டியல் போட்டார்.

பிப்ரவரி- ஷாகீன்பாக் , பிற கலவரங்கள்.

மார்ச்-சிந்தியா, மத்திய பிரதேச அரசு கைவிட்டு போனது.

ஏப்ரலில்- தொழிலாளர்களை தூண்டி விட்டது.

மே- தேர்தலில் வரலாற்று தோல்வி கண்டதன் 6-வது ஆண்டு தினம்.

ஜூன்- சீனாவுக்கு ஆதரவாக பேசியது.

ஜூலை-ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி அழிந்தது என ஜவடேகர் பட்டியலிட்டார்.

author avatar
murugan