இன்று செய்தியாளர்களை சந்திக்கவுள்ள முப்படை தலைமை தளபதி.!

முப்படை தலைமை தளபதி மற்றும் தளபதிகள் டெல்லியில் இன்று மாலை 6 மணி செய்தியாளர்களை சந்தித்து பேசவுள்ளனர்.

உலக முழுவதும் பேசப்படும் ஒரே வார்த்தை கொரோனா. அந்த அளவுக்கு மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய வைரஸ் சுமார் 200 நாடுகளில் கோரதாண்டவம் ஆடி வருகிறது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் ஒரு பகுதியாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா வைரசால் தினந்தோறும் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிப்பதே ஒரே தீர்வு ஆகும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. இதனால் பல நாடுகள் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்த கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தீவிரமடைந்து வருகிறது. இதனால் பாதிப்பும், உயிரிழப்பும் குறையாமல் உயர்ந்துகொண்டே செல்கிறது. இதன் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இது மேலும் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகள் டெல்லியில் இன்று மாலை 6 மணி செய்தியாளர்களை சந்தித்து பேசவுள்ளனர். இந்த சந்திப்பில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் முப்படைகளின் பணிகள் குறித்து விவரிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கினறன.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்