சீரகத்தில் உள்ள சிறப்பான நன்மைகள் குறித்து அறியலாம் வாருங்கள்

சமையலுக்கு மட்டுமே பயன்படும் என்று எண்ணி நாம் பயன்படுத்தக்கூடிய சீரகத்தில் உடலுக்கும் ஆரோக்கியத்திற்கு தேவையான பல நன்மைகள் அடங்கியுள்ளது. அவைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

சீரகத்தின் நன்மைகள்

சீரகத்தில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், வைட்டமின் பி6, வைட்டமின் சி ஆகிய பல்வேறு சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த சீரகத்தை கர்ப்பிணி பெண்கள் எடுத்து கொள்ளும் போது, நெஞ்செரிச்சல், வாயு தொல்லை நீங்குவதுடன் சளி மற்றும் காய்ச்சல் ஆகியவற்றை குணமாக்கவும் பயன்படுகிறது. அலர்ஜி ஏற்படாமல் பாதுகாக்கிறது. இதில் உள்ள அதிக அளவு இரும்பு சத்து காரணமாக ரத்த அணுக்கள் உற்பத்திக்கு மிகவும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. உடல் பருமன் பிரச்சினைகளையும் நீக்கக்கூடியது. இதய நோய் சர்க்கரை நோய் மற்றும் கீல்வாதம் ஆகிய நோய் உள்ளவர்கள் இந்த சீரகத்தை தினமும் எடுத்துக்கொள்ளலாம். மேலும் பருமனாக இருக்கிறோம் என வருத்தப்படுபவர்கள் தயிருடன் சேர்த்து நாள் ஒன்றுக்கு மூன்று கிராம் சீரகம் தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வரும் பொழுது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைந்து விரும்பிய உடல் அழகு பெறலாம்.

மூட்டு வலியை சரிசெய்ய உதவுவதுடன், வயிற்று வலியையும் அகற்றக்கூடிய தன்மை கொண்டது. மேலும் சர்க்கரை நோயாளிகள் இந்த சீரகத்தை எடுத்துக்கொள்ளும் பொழுது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.  ஆனால்,அதிகமாக எடுத்து கொள்ள கூடாது. மேலும் பெண்கள் மாதவிடாய் நேரத்தில் வெறும் வயிற்றில் காலையில் மென்று சாப்பிடலாம் அல்லது இரவு ஊற வைத்த சீரகத்தை காலையில் நீரையோ அல்லது அந்த சீரகத்தையும் குடிக்கலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வரும் பொழுது சீரற்ற மாதவிடாய் பிரச்சினைகள் நீங்குகிறது. உடலுக்கு மட்டுமல்லாமல் சரும நோய்களை குணப்படுத்தவும் இந்த சீரகம் பயன்படுகிறது. முதுமை தோற்றத்தை மறையச் செய்து, இளமையை தருகிறது. உடலில் ஏற்படக்கூடிய கொப்புளங்கள் போகக்கூடிய தன்மை கொண்டது .அரிப்பு ஏற்படும் இடத்தில் அரைத்துப் பூசினால் குணமடையும். மேலும் சீரகம் முடி உதிர்வைத் தடுக்கவும் உதவுகிறது. பொடுகு தொல்லையை நீக்கி பளபளப்பான அழகிய கூந்தல் கிடைக்க உதவுகிறது.

author avatar
Rebekal