சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதற்கான வயது 21 ஆக உயர்வு!

சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதற்கான வயது 21 ஆக உயர்வு!

மத்திய அரசு சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் விற்பனை செய்வதற்கான வயது 18 லிருந்து 21 ஆக உயர்த்துவதற்கான மசோதாவை தயாரித்துள்ளது.

மத்திய அரசு சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் விற்பனை செய்வதற்கான வயது 18 லிருந்து 21 ஆக உயர்த்துவதற்கான மசோதாவை தயாரித்துள்ளது. இதற்காக சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் திருத்த சட்டம் 2020 அரசாங்கம் வரைவு மசோதா தயார் செய்துள்ளது. இது விரைவில் சட்டம் ஆகும் என கூறப்படுகிறது.

இந்த மசோதா சிகரெட் மற்றும் புகையிலை தயாரிப்புகளுக்கான 2003ஆம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.  எந்த ஒரு நபரும் சிகரெட் அல்லது வேறு எந்த புகையிலை பொருட்களையும் 21 வயதுக்கு கீழே உள்ள நபர்களுக்கும், கல்வி நிறுவனத்தில் 100 மீட்டர் சுற்றளவில் எந்தப் பகுதியிலும் விற்கவோ, விற்பனை செய்யவோ அனுமதிக்கக் கூடாது என கூறப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்தால், அவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் வரை அபராதம் மற்றும் இரண்டாவது முறையும் இந்த தவறை செய்தால், ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஐந்து லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். சட்டவிரோத சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் இந்த மசோதாவில் ஒரு விதி உள்ளது.

அதன்படி சட்டவிரோத தயாரிப்புகளை விற்பனை செய்தால் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், 50 ஆயிரம் அபராதமும், இரண்டாவது முறை அதே தவறை செய்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும். தடை செய்யப்பட்ட இடங்களில் புகை பிடிப்பதற்கு அபராதம் ரூ.200 இல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube