‘மாணவர்களின் மதிய உணவில் தேங்காய் கீற்று!’ – அமைச்சர் கீதா ஜீவன்

சத்துணவில் முட்டை வழங்குவது போல தேங்காய் சில் வழங்க முன்வருமா என்ற கேள்விக்கு அமைச்சர் கீதா ஜீவன் பதில். 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வீட்டுவசதி மற்றும் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது, சத்துணவுத் திட்டத்தில் கலைஞர் முட்டை வழங்கினார், அதுபோல தேங்காய் கீற்று வழங்கவும் அரசு முன்வருமா என்று பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தமிழ்நாட்டில் சத்துணவு கூடங்களில், அரசு வழங்கக்கூடிய செறிவூட்டப்பட்ட அரிசியில் பல்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளன.

பள்ளி மாணவர்களுக்கான சத்துணவுத் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு மதிய உணவில் தேங்காய் கீற்று வழங்குவது தொடர்பாக அரசு பரிசீலனை செய்யும் என்றும் தமிழகத்தில் உள்ள சத்துணவு கூடங்களில் 1,024 கூடங்களில் வேளாண் தோட்டங்களில் காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டு பயன்பட்டு வருவதாகவும் தெரிவித்த அமைச்சர், காலி பணியிடங்கள் நிரப்புவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்