அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன் 13ம் தேதி தொடங்குகிறது..!

தமிழகத்தில் 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டு வரும் ஜூன் மாதம் 13 ஆம் தேதி முதல் தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியிட்டியப்பட்டுள்ளது. அதன்படி, 10 ஆம் வகுப்புக்கு வரும் மே மாதம் 6 ஆம் தேதி முதல் மே மாதம் 30 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் 11 ஆம் வகுப்புக்கு மே 9 மாதம் ஆம் தேதி தொடங்கி மே மாதம் 31 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், 12 ஆம் வகுப்புக்கு மே மாதம் 5 ஆம் தேதி தொடங்கி மே மாதம் 28 ஆம் தேதி  வரை பொதுத்தேர்வு நடைபெறும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டு வரும் ஜூன் மாதம் 13 ஆம் தேதி முதல் தொடங்கும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மாதம் 24 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும் என்றும்,  தெரிவித்துள்ளது.

author avatar
murugan