கூடும் ‘மகசூல்’ நிச்சயம்…!!! சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய…!! விவசாயிகள் நம்பிக்கை…!!!

சித்திரை முதல் நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் நிலத்தில் ஏர் பூட்டி, வழிபாடு செய்து பொன்னேர் உழவு உழுது சிறுதானிய விதைகளை விதைத்தனர். “சித்திரை மாத புழுதி பத்தரை மாற்று தங்கம்” என கிராமத்தில் சொல்வடையே இருக்கு. சித்திரை மாசப் பிறப்பான இன்று பொன்னேர் உழுதல் சிறப்பு. நல்ல நேரம் பார்த்து உழுவதால் இதனை ‘நல்லேர் பூட்டுதல்’ எனவும் சொல்லுவார்கள்

pon err uzavu

காலையிலேயே மாடுகளைக் குளிப்பாட்டி, அதுகளுக்கு பொட்டு வச்சு, தயார் படுத்தினோம். ஏர்க்கலப்பைக்கு மஞ்சள் பூசி, குங்குமம் வச்சு  பூமாலை போட்டு, கலப்பையை தோளில் தூக்கிட்டு, கையில மாட்டையும் பிடிச்சுக்கிட்டு விளை நிலத்துக்கு வந்தோம். நிலத்தில் சிறிய விளக்கேற்றி,  மஞ்சளில் பிள்ளையார் பிடிச்சு அதுல அருகம்புல் சொறுகி, நாழி நிறைய நெல்லு வச்சு தேங்காய்ப்பழம் உடைச்சு ,  மாடுகளுக்கும், ஏர்கலப்பைக்கும்  சாம்பிராணி, சூடம்  காட்டினோம்.

pon err uzavu

பிறகு, மாடுகளை சூரியனை நோக்கி கிழக்குப் பார்த்து நிறுத்தி ஏர் பூட்டினோம். இன்னைக்கு கிழக்குமேல் சூலம் என்பதால் வடக்கு மேலாக உழவு செய்தோம். உழவுக்குப் பிறகு, கம்பு, சோளம், குதிரைவாலி, கேழ்வரகு..ன்னு இந்தப் பட்டத்தில் என்ன விதைக்கிறோமோ அந்த விதைகளை மூணு கைப்பிடி எடுத்து பரவலா விதைச்சு விடுவோம். உழவு முடிந்ததும் தாகம் தீர்க்க.., பானகம் அல்லது மோர் குடிச்சுட்டு நிலத்துல இருந்து வீட்டுக்கு வருவோம் இவ்வாறு நம்பிக்கையுடன் தெரிவித்தார்

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment