சீன பாதுகாப்பு நிபுணர்கள் கவலை!இந்திய வீரர்கள்,சீன மொழியைக் கற்பது அச்சுறுத்தல்….

சீன பாதுகாப்பு நிபுணர்கள் இந்திய வீரர்கள், சீன மொழியைக் கற்பது அச்சுறுத்தலாக அமையுமென  கவலை தெரிவித்துள்ளனர்.

இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த அதிகாரிகள் உள்பட 25 பேர், ஓராண்டு சான்றிதழ் கல்வி மூலம் சீன மொழியைப் பயின்று வருகின்றனர். இது, சீன வீரர்களுடனான தவறான புரிதலைத் தவிர்க்க உதவும் என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இது அமைதியான சூழலில் நட்புறவை ஏற்படுத்தினாலும், போர் ஏற்படும் சமயத்தில் தங்கள் வீரர்கள் பேசுவதைப் புரிந்துகொண்டு இந்திய வீரர்கள் வியூகம் வகுத்துத் தாக்கக் கூடும் என சீன பாதுகாப்பு நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே இந்தி மொழியை சீன வீரர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது இந்தியா அதை அமல்படுத்தியுள்ளது அவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment