சீனாவை சேர்ந்த பிரபல டிக்டாக் பிரபலம் எரித்துக் கொலை!

சீனாவில் டோயின் என்ற டிக்டாக் செயலியில் பிரபலமான பெயர் லாமு. இவர் சிச்சுவான்  மாகாணத்தின் கிராமிய வாழ்க்கை தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வந்தார். மேக்கப் இல்லாமல் இயல்பாக தோன்றும் லாமுவுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. சமூகவலைதள  பக்கத்தில், அவரை 7,82,000 பேர் பின்தொடர்கின்றார்கள்.

இந்நிலையில், லாமுவை அவரது முன்னாள் கணவர் உயிருடன் எரித்துக்கொன்ற சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைதளத்தில் வெளியிடுவதற்காக வீடியோவைப் பதிவு செய்துகொண்டிருந்தபோது அவரது குடும்பத்தினரின் கண் எதிரே, அவரது முன்னாள் கணவர் இந்த கொடூர சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார்.

லாமு தொடர்ந்து பல நாள்கள் குடும்ப வன்முறையில் ஈடுபட்டுவந்த கணவனுக்கு எதிராக, விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தார். இருவரிடமும் தலா ஒரு குழந்தை வளர்ந்து வந்துள்ளனர். பின்னர், தன்னுடன் சேர்ந்து வாழாவிட்டால் குழந்தையைக் கொன்றுவிடுவதாக முன்னாள் கணவர் மிரட்டியுள்ளார். இவ்வாறு இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு வந்த நிலையில், இப்பெண் உயிரிழப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன், 90 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய ரசிகர் பட்டாளத்தையே தன்வசம் கொண்ட லாமுவுக்கு, இப்படி ஒரு கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.