10.58 லட்சம் பேர் பங்கேற்கும்- Civil சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு இன்று.!

இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 750 இடங்களுக்கான சிவில் சர்வீசஸ் முதல் நிலைத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது.

IAS, IPS, IFS என்ற பதவிகளில் காலியாக உள்ள 750 இடங்களுக்கானளை  சிவில் சர்வீஸஸ் முதல்நிலைத் தேர்வை ( Prelims ) மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ( UPSC ) நடத்துகிறது.

நாடு முழுவதும் 72 நகரங்களில், 2569 மையங்களில் நடைபெறும் இத்தேர்வை 10.58 லட்சம் பேர்  இன்று எழுத உள்ளனர்.

அதே போல தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய இடங்களிலும் சென்னையில் 62 மையங்களில் நடைபெறுகிறது இத்தேர்வை 22,000 பேர் எழுதுகின்றனர் தேர்வு மையங்களை தங்கள் விருப்பத்துக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம் என்று UPSC இதற்கு முன் அறிவித்திருந்த நிலையில், 60,000 தேர்வர்கள் தங்கள் தேர்வு மையங்களை விருப்பத்துக்கேற்ப மாற்றியிருப்பதாக UPSC தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் அச்சத்துக்கிடையே நடைபெறும் தேர்வு இன்று காலை 9.30 மணி மற்றும் பகல் 2.30 மணி என்று இரு கட்டங்களாக நடைபெறுகிறது.தேர்வுக்காக பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ள UPSC, தேர்வர்கள் அவற்றைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.

முகக்கவசம் அணிந்து, ஹால் டிக்கெட்டுடன் வரும் தேர்வர்கள் மட்டுமே தேர்வு மையத்துக்குள்ளாக அனுமதிக்கப்படுவர் என்றும், தேர்வு தொடங்குவதற்கு 10 நிமிடம் முன்பு வரை மட்டுமே தேர்வு மையத்துக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று UPSC தெரிவித்துள்ளது.

OMR Sheet முறையில் நடைபெறும் தேர்வை எழுத கறுப்பு நிற பேனாவை தேர்வர்கள் எடுத்து வர வேண்டும் என்றும், வெளிப்படையான பாட்டிலில் சானிடைசரை எடுத்துவர வேண்டும்.தனி மனித இடைவெளி கட்டாயம், வெப்பநிலை பரிசோதனை கட்டாயம், அடையாள அட்டை கட்டாயம், மின்னணு சாதனங்கள் கூடாது போன்ற அறிவுறுத்தகளுடன் தேர்வு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

author avatar
kavitha