பேரழிவு ஏற்படுத்திய சீனா அதிக விலையை தர நேரிடும் – அதிபர் ட்ரம்ப்

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பில் உலக அளவில், வல்லரசு நாடான அமெரிக்க முதலிடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் உள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், ஒரு சில தினங்களிலேயே, முழுமையாக குணமடையாமல், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

இந்நிலையில், ‘கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை கடவுள் தந்த வரமாகவே கருதுகிறேன். இதன் மூலம், கொரோனாவுக்கான மருத்து கண்டுபிடிப்பதன் அவசியத்தை கடவுள் கற்றுக் கொடுத்துள்ளார் என்றும், கொரோனாவை உருவாக்கி அமெரிக்கா மற்றும் உலகத்துக்கு பேரழிவு ஏற்படுத்தியதற்காக சீனா அதிக விலையை தர நேரிடும்.’ என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.