ஜார்ஜ் பிளாய்டை கொலை செய்த போலீஸ் அதிகாரி ஜாமீனில் விடுதலை..!

ஜார்ஜ் பிளாய்டை கொலை செய்த போலீஸ் அதிகாரி ஜாமீனில் விடுதலை..!

ஜார்ஜ் ஃபிலாய்ட் கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமெரிக்க காவல்துறை அதிகாரி சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

கடந்த மே 25 அன்று ஜார்ஜ் ஃபிலாய்ட் என்ற கறுப்பின மனிதர் போலீசார் கைது செய்ய  ஒத்துழைப்பு தர மறுத்துள்ளார். இதனால்,  போலீஸ் அதிகாரி டெரிக் ஸ்யவின் கிட்டத்தட்ட எட்டு நிமிடங்கள் ஃபிலாய்டின் கழுத்தில் முழங்காலால் அழுத்தி நெரித்தார். இதனால் ஜார்ஜ் பிளாய்ட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் உலக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு நீதிகேட்டு அமெரிக்கா மட்டுமல்லாமல் பல நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றது. பின்னர், டெரிக் ஸ்யவின் உட்பட 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யபட்டு, கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று டெரிக் 1 மில்லியன் டாலரை பிணைத்தொகையாக கட்டியதை தொடர்ந்து,  டெரிக்  சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

author avatar
murugan
Join our channel google news Youtube