இந்தியாவுக்கு 6.5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்டை அனுப்பிய சீனா.!

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட சீனா இன்று அதிகாலை 6.5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை இந்தியாவுக்கு அனுப்பியதாக பெய்ஜிங்கிற்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா வைரஸை எதிர்த்து போராட மற்றும் விரைந்து செயல்பட சீனாவில் இருந்து இந்தியாவுக்கு 6.5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் கருவி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரேபிட் டெஸ்ட் கிட் அனுப்பப்பட்டது தொடர்பாக சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் சீனாவின் குவாங்சோ விமான நிலையத்தில் இருந்து ரேபிட் டெஸ்ட் கிட் கருவி இந்தியாவுக்கு அதிகாலை விமானம் மூலம் அனுப்பப்பட்டது. மேலும் கொரோனா பரிசோதனையை விரைவாக மேற்கொள்ள இந்தியாவுக்கு ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் வந்த பிறகு மாநிலங்களுக்கு அவை பிரித்துக் கொடுக்கப்படும் என்று தகவல் கூறப்படுகிறது.
சீனாவில் கொரோனா வைரஸுக்கு எதிரான கடந்த இரண்டு மாத கால போராட்டத்துக்கு பிறகு அங்கு இயல்புநிலை திரும்பியுள்ளது. மேலும் அனைத்து தொழிற்சாலைகளும் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், இந்தியா உட்பட உலக முழுவதும் உள்ள முக்கிய மருத்துவப் பொருட்கள், குறிப்பாக வென்டிலேட்டர்கள் மற்றும் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) ஏற்றுமதி செய்வதற்கான மிக பெரிய வணிக வாய்ப்புகளை சீனா கேட்டு வருகிறது. இந்த தயாரிப்புகளை இறக்குமதி செய்வதற்கான உத்தரவுகளை தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் வழங்குகின்றன. இதனிடையே இந்தியாவிற்கு ஏற்கனவே மருத்துவ கருவிகளின் இரண்டு முக்கிய பொருட்கள் சீனாவிலிருந்து அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்