முதலமைச்சரின் லட்சிய நோக்கம் ஒரு ட்ரில்லியன் டாலர் – அமைச்சர் மா.சுப்பிரமணியம்

தொழில் நிறுவனங்கள் மருத்துவ துறையில் ஈடுபாட்டை காட்ட வேண்டும் என மருத்துவத்துறை அமைச்சர் பேச்சு.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் விருதுகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதலமைச்சரின் லட்சிய நோக்கம் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம். அந்த வகையில், தொழில் நிறுவனங்கள் மருத்துவ துறையில் ஈடுபாட்டை காட்ட வேண்டும் அதன் மூலம் வளர்ச்சியை காண வேண்டும்.

மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் தமிழ்நாட்டில் 96 லட்சம் பேர் வீட்டில் இருந்து கொண்டே மருத்துவம் பெற்றுள்ளனர். தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் மருத்துவ சாதனை நடைபெறவிலை என பாராட்டுகிறார்கள். மருத்துவ உபகரணங்களை தமிழகத்தில் தயாரிக்கும் பணியினை மேற்கொள்ளவேண்டும். இதற்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் ந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்புக்கு உறுதியளித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment