, ,

24 மணிநேரத்தில் ஈரோட்டில் கொட்டிதீர்த்த கனமழை.! மொத்தமாக 815.60 மி.மீ.!

By

கடந்த 24 மணிநேரம் வரையில் ஈரோடு மாவட்டத்தில் 815.60 மி.மீ மழை பதிவாகியுள்ளது. 

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை சுற்றுவட்டார மாவட்டங்கள், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

அதே போல ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. அதில், ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்ய தொடங்கிய மழை அவ்வப்போது மழை பெய்து வந்துள்ளது. அதில் மிதமான மழை.கனமழை என மாறி மாறி பெய்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக சென்னிமலையில் 93 மிமீ மழை பதிவாகி உள்ளது. அதேபோல் ஈரோட்டில் 50மிமீ மழையும், கொடுமுடியில் 67மிமீ, மொடக்குறிச்சியில் 63மிமீ, பெருந்துறையில் 54மிமீ, எலந்த குட்டைமேட்டில் 52.60மிமீ, நம்பியூரில் 52மிமீ, கவுந்தப்பாடியில் 49.20மிமீ, கொடிவேரியில் 45மிமீ, பவானியில் 44.4மிமீ, அம்மாபேட்டையில் 39.40மிமீ, சத்தியமங்கலத்தில் 37மிமீ, பவானிசாகரில் 34.80மிமீ, கோபியில் 32மிமீ, வரட்டு பள்ளம் பகுதியில் 31.60மிமீ, குண்டேரி பள்ளம் பகுதியில் 28.60 மிமீ மழை என மொத்தமாக ஈரோடு மாவட்டம் முழுவதும் 815.60 மி.மீ மழை பதிவாகியுள்ள்ளது.

Dinasuvadu Media @2023