லவ் டுடே படத்துக்கு ரஜினிகாந்த் பாராட்டு.!நெகிழ்ந்து போன இயக்குனர்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் நடிக்கும்  படங்கள் மட்டுமின்றி தமிழில் வெளியாகும் பல நல்ல படங்களை பார்த்துவிட்டு அப்படத்தின் இயக்குனர் மற்றும் நடிகரை பாராட்டி வருகிறார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான ‘காந்தாரா’ படத்தை பார்த்துவிட்டு பாராட்டி இருந்தார்.

இதனை தொடர்ந்து, தற்போது சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே படத்தை சூப்பர் ஸ்டார் பார்த்துவிட்டு பிரதீப்பை வீட்டிற்கு அழைத்து பொன்னாடை போர்த்தி பாராட்டியுள்ளார்.

இதனை  பிரதீப் ரங்கநாதன் தனது ட்வீட்டர் பக்கத்தில் ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியீட்டு நெகிழ்ச்சியுடன் ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில் ” நான் இன்னும் என்ன கேட்க முடியும்? சூரியனுக்கு அருகில் இருப்பது போல் இருந்தது. அவ்வளவு சூடு. இறுக்கமான அணைப்பு , அந்த கண்கள் , சிரிப்பு , நடை மற்றும் காதல் . என்ன ஒரு ஆளுமை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் #LoveToday ஐ பார்த்தார், சார் நீங்கள் சொன்ன வார்த்தைகளை என்றும் மறக்கமாட்டேன்’ என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment