சிறை நூலகங்களுக்கு புத்தகங்களை நன்கொடையாக வழங்கிய முதல்வர்..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், வெளியிடங்களுக்கு சென்றாலே அவருக்கு பொன்னாடைகள், பூங்கொத்துகள், புத்தகங்கள் வழங்கப்படுவதுண்டு. அந்த வகையில், முதல்வர் அவர்கள் ஆட்சிக்கு வந்த சில நாட்களில் தனக்கு பொன்னாடை போர்த்துவதை விட, புத்தகங்களை வழங்குமாறு அறிவுறுத்தி இருந்தார்.

அதன்படி முதல்வர் அவரகள், அரசு நிகழ்ச்சி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு சென்றாலே அவருக்கு பெரும்பாலான அரசியல் தலைவர்கள் புத்தகங்களை கொடுத்து வரவேற்பது வழக்கமாக உள்ளது.

பிரதமராவதற்கு அனைத்து தகுதியும், வல்லமையும் ஈபிஎஸ் இடம் உள்ளது – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

அந்த வகையில், முதல்வர் அவர்கள், தனக்கு அன்பளிப்பாக வழங்கப்படும் புத்தகங்களை சேமித்து வைத்து பல்வேறு நூலகங்களுக்கு வழங்கி வருவது வழக்கம். இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அன்பளிப்பாக வழங்கிய புத்தகங்களில் 1500 புத்தகங்களை தமிழ்நாட்டில் உள்ள சிறை நூலகங்களுக்கு நன்கொடையாக அளித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 1500 புத்தகங்களை தமிழ்நாட்டில் உள்ள சிறை நூலகங்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த புத்தகங்களை சிறை துறை இயக்குனர் அவர்கள் பேரருட் கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது, அமைச்சர் ரகுபதி, உள்துறை செயலாளர் அமுதா, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை துணைத் தலைவர் கனகராஜ்  உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.