Wednesday, November 29, 2023
Homeதமிழ்நாடுபிரதமராவதற்கு அனைத்து தகுதியும், வல்லமையும் ஈபிஎஸ் இடம் உள்ளது - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

பிரதமராவதற்கு அனைத்து தகுதியும், வல்லமையும் ஈபிஎஸ் இடம் உள்ளது – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

கடந்த சில நாட்களுக்கு முன்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள், ஒரு நிகழ்ச்சியில், நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என எதுவாக இருக்கட்டும் எடப்பாடியின் கரத்தை வலுப்படுத்துங்கள்.

எடப்பாடியாரே பிரதமராக வரக்கூடிய அளவுக்கு 40 தொகுதிகளிலும் அற்புதமான தீர்ப்பை தமிழ்நாட்டு மக்கள் வழங்குவார்கள். சூழ்நிலை வந்தால் எடப்பாடி பழனிசாமியே கூட இந்திய பிரதமராக வர வாய்ப்பு உள்ளது என தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து, ஓபிஎஸ்-யிடம் எடப்பாடி பழனிசாமி பிரதமர் வேட்பாளர் என்று ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஓபிஎஸ், செய்தியாளர்களிடம் இன்னொரு முறை சொல்லுங்கள், இன்னொரு முறை சொல்லுங்கள் என கிண்டலாக கேட்டார். பின்னர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் வேட்பாளர் என்று கேட்டாலே அப்படியே தலையை சுற்றுகிறது என கூறிவிட்டு ஓபிஎஸ் சென்றார்.

இபிஎஸ் பிரதமர் வேட்பாளரா? அதை கேட்டாலே தலை சுற்றுகிறது – ஓபிஎஸ்

இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள், எங்கள் மீது துரும்பு விழுந்தால் தூணை வீசுவோம். பாஸ்ட்புட் போன்று தலைவர்கள் வருகிறார்கள். ரவுடிகள் எல்லாரும் மத்தியில் ஆளும் கட்சியில் சேர்க்கிறாரகள்.

யார் வேண்டுமானாலும் நாட்டின் பிரதமராக வரலாம். அதை தான்  ராஜேந்திரபாலாஜிசொன்னார். நாட்டின் பிரதமராக கூடிய அனைத்து தகுதியும் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட வராது. அதனால்தான் நாங்களே கூட்டணியில் இருந்து விலகி விட்டோம்.