சிறந்த திருநங்கை இவர்தான் – விருது மற்றும் ரூ.1 லட்சம் வழங்கி சிறப்பித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

CM MK ,

தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில்,திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை அ.மர்லிமா அவர்களுக்கு,25 ஆண்டுகால சேவையை பாராட்டி 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதினை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் வழங்கி சிறப்பித்துள்ளார்.மேலும்,விருதுடன் ரூ.1 லட்சத்திற்கான காசோலையையும் முதலைமைச்சர் அவர்கள் வழங்கியுள்ளார்.

இதனிடையே விழுப்புரம் அருகே கூவாகம் திருவிழா ஆடல் பாடலுடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.மேலும்,விழாவின்போது நடைபெற்ற அழகிப்போட்டியில் சென்னையை சேர்ந்த சாதனா முதலிடம் பெற்றுள்ளார்.