புதிய கல்லூரிகள், ஆராய்ச்சி மையங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

உழவர் நலத்துறை சார்பில் புதிய கல்லூரிகள் மற்றும் வேளாண் ஆராய்ச்சி மையங்கள் திறப்பு.

சென்னை தலைமைச் செயலகத்தில் உழவர் நலத்துறை சார்பில் புதிய கல்லூரிகள் மற்றும் வேளாண் ஆராய்ச்சி மையங்களை காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன்படி, மஞ்சள் மற்றும் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தொடங்கி வைக்கப்பட்டது.

மேலும், கரூர், நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர், சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு ஆகிய இடங்களில் 3 புதிய வேளாண்மை கல்லூரிகளும், கோயம்பேட்டில் ரூ.2.67 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஓய்வுக்கூடம், சிற்றுண்டியகம், செங்கல்பட்டு மறைமலை நகரில் ரூ.5.85 கோடியில் கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடம் உள்ளிட்ட பல்வேறு கட்டங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த நிகழ்வின்போது, அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலாளர் பங்கேற்றனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்