தூக்கம் வராமல் கஷ்டப்படுகிறீர்களா? இதை தினமும் செய்து வந்தாலே போதும்..!

தூக்கம் வராமல் கஷ்டப்படுகிறீர்களா? இதை தினமும் செய்து வாருங்கள்.

நமது வாழ்க்கை சூழல் வேறுபட்டு இருக்கிறது. முன்னர் சரியான நேரத்திற்கு உண்டு, உறங்கி வந்தனர். ஆனால், தற்போது உத்தியோக வேலையும் சரி சுற்றுசூழலும் சரி மாறுபட்டு இருக்கிறது. இதனால் சரியான நேரத்திற்கு சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது போன்ற பழக்க வழக்கங்கள் யாரும் பின்பற்றுவது கிடையாது. இதனால் உடல் பாதிப்புகளும் பல்வேறு ஏற்படுகிறது. தூக்கமின்மையால் பலரும் அவதிப்படுகின்றனர். சரியான தூக்கம் இல்லாவிட்டால் ஒரு மனிதன் இயல்பாக இருக்க இயலாது. அதனால் அளவான தூக்கம் ஒரு மனிதனுக்கு கண்டிப்பாக அவசியம். இதற்கு என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறீர்கள் என்றால் இந்த பதிவை நிச்சயம் பாருங்கள். இதை செய்து வந்தாலே உங்களுக்கு இயல்பான தூக்கம் நிச்சயம் கிடைக்கும்.

எலக்ட்ரானிக் பொருட்கள்: நீங்கள் செல்போன், லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை அதிகமாக பயன்படுத்துகிறீர்கள் என்றால் உங்களுக்கு சீக்கிரம் தூக்கம் வராது. அதனால் நீங்கள் தூங்கும் நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக உங்களது எலக்ட்ரானிக் பொருட்களை ஆப் செய்து வைத்து விடுங்கள். இதனால் தூக்கம் நிச்சயம் ஏற்படும்.

புத்தகம் படிப்பது: புத்தகம் படிப்பது ஒரு நல்ல பழக்கம் மட்டுமில்லாமல் இது தூக்கத்திற்கு மிகவும் உகந்தது. நீங்கள் தூங்க செல்லும் முன் ஒரு கதை புத்தகமோ அல்லது நாவலோ எடுத்து படித்து வாருங்கள். இது உங்களுக்கு அமைதியான மனநிலையை கொடுக்கும்.

சூடாக ஏதாவது குடிக்கவும்: இரவு நேரத்தில் தூங்க செல்லும் முன் மஞ்சள் பால் குடிக்கலாம். அல்லது தேநீர் குடிக்கலாம். இது உங்களுக்கு தூக்கம் வர உதவி செய்யும்.

குளித்தல்: தூங்க செல்லும் முன் குளிப்பது நல்ல ஒரு மாற்றத்தை அளிக்கும். அதனால் தூங்குவதற்கு முன்பு குளிக்க வேண்டும்.

மூச்சு பயிற்சி: தூங்குவதற்கு முன்பு மூச்சு பயிற்சி செய்வது சிறந்த பலனை அளிக்கும். பிராணாயாமா செய்வது நல்லது. 5 நிமிடம் மூச்சு பயிற்சி செய்வது மூலமாக மனநிலை அமைதியாக மாறிவிடும். இதனால் தூக்கம் மேம்படும்.