காவல்துறைக்கான புதிய செயலியை அறிமுகம் செய்த முதல்வர் மு.க ஸ்டாலின்!

குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவும் புதிய செயலி முதல்வர் முக ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ளார்.

முக அடையாளத்தை கொண்டு குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்கும் வகையில் புதிய செயலியை முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிமுகப்படுத்தியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் இதனை அறிமுகம்படுத்தினார்.

சந்தேகப்படும் நபரை காவல்துறையினர் புகைப்படம் எடுத்து அதனை புதிய செயலியில் பதிவேற்றினால், அவர் குற்றம் செய்வதவரா அல்லது தேடப்படும் நபரா என்பது குறித்த விவரங்கள் இதன் மூலம் அறிய முடியும்.

ஏற்கனவே, இந்த செயலியில் தமிழகம் முழுவதும் குற்றங்கள் செய்தவர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் இதன் மூலம் குற்றவாளிகளை கண்டறிய எளிமையாக இருக்கும் என்பதற்காக இதனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்