திருமாவளவன் தாயாரின் உடல்நிலை குறித்து விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

திருமாவளவன் அவர்களிடம் அவரது தாயாரின் உடல்நிலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொலைபேசி மூலம் கேட்டறிந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பதாக விசிக தலைவர் திருமாவளவன்  உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், திருமாவளவன் அவர்களிடம் அவரது தாயாரின் உடல்நிலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொலைபேசி மூலம் கேட்டறிந்துள்ளார். இதுகுறித்து திருமாவளவன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இன்று காலை எட்டு மணியளவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அம்மாவின் உடல்நலம் குறித்து விசாரித்தார். மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment