தமிழ்நாட்டின் முதல் மரபணு பகுப்பாய்வு மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் ₹4 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட, தமிழ்நாட்டின் முதல் மரபணு பகுப்பாய்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழகத்தில் டெல்ட்டா பிளஸ் வைரஸை கண்டறியும் ஆய்வகத்தை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்த நிலையில், ரூ.4 கோடி செலவில் சென்னையில் மரபணு ஆய்வகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான ஆய்வு கருவிகளும் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் ₹4 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட, தமிழ்நாட்டின் முதல் மரபணு பகுப்பாய்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 91 இளநிலை உதவியாளர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கினார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ்  உருமாற்றத்தை கண்டறிய 11-வது ஆய்வகமாக சென்னை ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. நவீன கருவிகளைக் கொண்ட இந்த  ஆய்வகத்தில், பெங்களூரில் பயிற்சி முடித்த ஆறு 6 பேர் உள்பட 10 குழுவினர் பணியாற்ற உள்ளனர். ஒரே நேரத்தில் ஆயிரம் மாதிரிகளை பரிசோதனை செய்வதற்கான திறன் சென்னை ஆய்வகத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.