தாயார் மறைவு.! ஓபிஎஸ் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.! 

ஓ.பன்னீர்செல்வம் தயார் மறைவுக்கு ஆறுதல் கூற ஓ.பி.எஸ் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 

முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தயார் பழனியம்மாள் கடந்த மாதம் 25ஆம் தேதி தேனியில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்தனர்.

முதல்வர் வருகை :

முதல்வர் மு.க.ஸ்டாலினும் இணையம் வாயிலாக தனது இரங்கலை தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தற்போது சென்னை கிரீன்வே சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு நேரடியாக சென்றுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

நேரில் ஆறுதல் :

அவருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் சென்றுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் மனோஜ் பாண்டியன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோரும் இருக்கின்றனர். ஓபிஎஸ் தயார் மறைவுக்கு நேரில் சென்று தனது இரங்கலை ஓ.பன்னீர்செல்வத்திடம் மு.க.ஸ்டாலின் கூறினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment