பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் பதவியிலிருந்து சேத்தன் சர்மா விலகல்..!

பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் பதவியிலிருந்து சேத்தன் சர்மா விலகினார்.

இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு (பிசிசிஐ) தலைவர் சேத்தன் சர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார்.  பிசிசிஐ தலைமைத் தேர்வாளர் சேத்தன் ஷர்மா, பிசிசிஐ-யில் நடக்கும் சில மறைக்கப்பட்ட உண்மைகளை வெளியிட்டிருந்தார்.

சமீபத்தில் ஜீ மீடியா நிறுவனம் நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைமை தேர்வாளர் சேத்தன் சர்மா, இந்திய வீரர்கள் சிலர் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

Readmore : போலி ஃபிட்னஸ், கோலி-கங்குலி பிரச்சனை பல திடுக்கிடும் உண்மைகளை வெளியிட்ட சேத்தன் சர்மா.!

இந்நிலையில் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா பிசிசிஐ-ன் தலைமை தேர்வாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார். சேத்தன் சர்மா அனுப்பிய ராஜினாமா கடிதத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஏற்றுக்கொண்டார். ஜீ மீடியா நிறுவனம் நடத்திய நிகழ்வில் ரோகித், விராட் கோலி, கங்குலி உள்ளிட்டோர் குறித்தும் சேத்தன் சர்மா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment