உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட 2 இஸ்லாமியர்களின் சடலங்கள்… பசு கடத்தியதற்காக நடந்ததா இந்த கொடூரம்.? 

ராஜஸ்தானில் காணாமல் போன இரு இஸ்லாமியர்கள் ஹரியானாவில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கபட்டனர். 

ராஜஸ்தானின் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில்வ வசித்து வந்த நசீர் (25 வயது) மற்றும் ஜுனைத் (35 வயது) ஆகியோரை காணவில்லை என அவர்களது குடும்பத்தார் கடந்த புதன்கிழமை போலீசில் புகார் அளித்துள்ளனர். மேலும் அவர்கள் கடத்தப்பட்டு இருக்கலாம் என குற்றம் சாட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையை தொடர்ந்து, நேற்று ஹரியானா மாநிலத்தில், பிவானி மாவட்டத்தில் காலை மஹிந்திரா பொலிரோ வாகனத்தில் இரண்டு பேரின் சடலங்கள் உடல் முழுவதும் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இது  கடத்தப்பட்டதாக புகாரில் கூறப்பட்ட நசீர் மற்றும் ஜுனைத் ஆகியோரின் சடலங்கள்தானா என்பதை உறுதிப்படுத்தும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதனை கண்டறிய நசீர் மற்றும் ஜுனைத் ஆகியோரின் குடும்பத்தார் வரவழைக்கப்பட்டுள்ளனர். அப்போது அவர்கள் இந்த கார், ஜுனைத் ,  நசீருக்கு தெரிந்த நபருடைய கார் தான் உறுதிபடுத்தினர் . இருந்தாலும், டிஎன்ஏ மற்றும் உடற்கூறாய்வு சோதனை செய்து இவர்கள் தான் என்பதை உறுதிப்படுத்தும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஜுனைத் மீது ஏற்கனவே பசு கடத்தியதற்க்கான வழக்குகள் இருக்கிறதாம். நசீர் மீது அப்படி எந்த வழக்குகளும் இல்லையாம். இதனால் இது பசு கடத்தலுக்காக சில அமைப்பை சேர்த்தவர்கள் செய்திருக்கலாம் என மோனு மானேசர், லோகேஷ் சிங்யா, ரிங்கு சைனி, அனில் மற்றும் ஸ்ரீகாந்த். மோனு மானேசர் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் வலதுசாரி அமைப்பான பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment