மலேசியாவில் இருந்து வந்து ரயிலில் திருடி மீண்டும் மலேசியாவிற்கு சென்றுவிடும் பலே திருடன் பிடிபட்டான்!

மலேசியாவில் வேலை பார்த்து வரும் கேரளா திரிசூரை சேர்ந்த சாஹுல் ஹமீது இவர் இந்தியாவிற்கு

By manikandan | Published: May 17, 2019 05:59 PM

மலேசியாவில் வேலை பார்த்து வரும் கேரளா திரிசூரை சேர்ந்த சாஹுல் ஹமீது இவர் இந்தியாவிற்கு அடிக்கடி வந்து ரயிலில் ஏ.சி டிக்கெட் எடுத்துவிட்டு, அதில் பயணிக்கும் பயணிகளிடம் நகைகளை கொள்ளையடித்து பிறகு அதனை கேரளா, மும்பையில் விற்று மீண்டும் மலேசியாவிற்கு சென்றுவிடும் இந்த நூதன திருடனை கட்சிதமாக வலை விரித்து பிடித்துள்ளனர் தமிழ்நாடு காவல் தனிப்படை குழு. இந்த மாதிரியான ஏசி ரயில் பெட்டிகளில் கொள்ளை சம்பவம் காவல்துறைக்கு மிகவும் சிக்கலாக இருந்தது. இந்த கொள்ளையை கண்டறிய டிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் டிஐஜி பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தாமஸ் மற்றும் ஜேசுதாசன் ஆகியோர் அடங்கிய தனிப்படை இந்த கொள்ளையனை கண்டுபிடித்துள்ளது. இவரை சென்னை ரயில் நிலையத்தில் சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரித்த போலீசார் பிறகு உண்மைகளை தெரிந்து கொண்டனர். இவ்வாறு திருடி மலேசியாவில் பெரிய ஹோட்டலில் மேனேஜராக இருக்கிறான். இவனிடம் சுமார் 100 சவரனுக்கு அதிகமான நகைகள் மீட்கப்பட்டுள்ளன. இவர் மேல் ஏற்கனவே ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு உள்ளதாம்.இவனை பிடித்து தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். DINASUVADU
Step2: Place in ads Display sections

unicc