சென்னை பேருந்தில் நடத்துனரை தாக்கிய கல்லூரி கபடி பயிற்சியாளர்! வழக்குபதிவு செய்து விசாரித்து வரும் போலீஸ்!

சென்னை அண்ணா சாலையில் இருந்து பெரியார் திடல் வரை செல்லும் 29A பேருந்தில்,  தெலுங்கானாவை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கபடி போட்டியில் கலந்துகொண்டு சென்னை மெரினா பீச்சை சுற்றிப்பார்க்க பயணம் செய்துள்ளனர். அப்போது, பயிற்சியாளர் லக்ஷ்மணனுக்கும் நடத்துனரும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதில், கோபமடைந்த பயிற்சியாளர் லட்சுமணன் தனது ஸ்டாப்பிங் வந்தவுடன் இறங்குகையில் நடத்துனரின் காலை மிதித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, லட்சமனனுக்கும், நடத்துனருக்கும் இடையே மோதல் வந்துள்ளது. பயிற்சியாளர் வின்சென்ட்டை பயிற்சியாளர் லக்ஷ்மன் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதனை பார்த்த பொதுமக்கள் பயிற்சியாளர் லட்சுமணனையம் மாணவர்களையும் தாக்கியுள்ளனர். பின்னர் தகவலறிந்து எழும்பூர் காவல் அதிகாரிகள் வந்து விளையாட்டு வீரர்களையும், பயிற்சியாளர்களையும், ஓட்டுனர், நடத்துனர் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வந்துள்ளனர். பின்னர் பயிற்சியாளர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் அரசு ஊழியரை தாக்குதல் போன்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதனால் சென்னை எழும்பூர் அரசு பேருந்துநிலைய ஊழியர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்காரணமாக  பேருந்துகள் ஓடாமல் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.