மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகிறது. இந்த போட்டி தற்போது லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதுவுள்ளது.

இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால் சென்னை அணி பேட்டிங் செய்ய களமிறங்குகிறது. சென்னை அணியில் புதிய 2 மாற்றங்களை தற்போது கொண்டு வந்துள்ளனர். அது என்னவென்றால் மோசமான பார்மில் இருந்த டேரில் மிச்சேலுக்கு பதிலாக இங்கிலாந்து ஆல் ரவுண்டரான மொயின் அலி களமிறங்கருக்கிறார்.

மேலும், பவுலிங் ஷர்துள் தாகூருக்கு பதிலாக தீபக் சஹர் அணியில் இடம் பெற்றுள்ளார். லக்னோ அணியில் பெரிதாக மாற்றம் இல்லாவிட்டாலும் ஜோசப்க்கு பதிலாக மேட் ஹென்றி அணியில் இடம்பெற்றுள்ளார்.

லக்னோ அணி வீரர்கள் 

குயின்டன் டி காக், கே.எல். ராகுல்(கேப்டன்/விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, மாட் ஹென்றி, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், யாஷ் தாக்கூர்

சென்னை அணி வீரர்கள் 

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் ரஹ்மான், மதீஷா பத்திரனா.

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.