#BREAKING: சென்னை ஈ.சி.ஆர் 6 வழிச்சாலை- நிதியமைச்சர் அறிவிப்பு..!

நடப்பு ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை செயலக வளாகத்தில் தாக்கல் செய்து வருகிறார்.

ஆறு வழிச் சாலை:

கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தீர்க்க நான்கு வழி சாலையாக உள்ள சாலையை ஆறு வழிச் சாலையாக மேம்படுத்தப்படும். இதற்கு 135 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்தார்.

இலவச பயண திட்டத்தால் பேருந்தில் பயணிக்கும் மகளிர் எண்ணிக்கை 60% ஆக உயர்ந்துள்ளது. கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு, சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு  செய்யப்படுவதாக அறிவித்தார்.

author avatar
murugan