சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம் …! சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் அதிகளவில் வருகை …!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூட்டம் அலை மோதுகிறது.

தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக 20000-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவுகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அக்டோபர் 31 ஆம் தேதி சென்னையில் தொடங்கி  வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நவம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் 11,367 சிறப்பு பேருந்துகள், மற்ற மாவட்டங்களில் இருந்து 9,200 பேருந்துகள் என 20,567 சிறப்பு பேருந்துகள் தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்படும். அதே போன்று பண்டிகை முடிந்து திரும்ப சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு 4,207 பேருந்துகளும், பிற இடங்களுக்கு 7,635 பேருந்துகளும் இயக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
ஆனால் பேருந்து அதிக அளவில் இருந்தாலும் தீபாவளியையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் அதிகளவில் வருவதால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூட்டம் அலை மோதுகிறது

Leave a Comment