முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

தருமபுரி, புதுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன் மீது நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தருமபுரி, புதுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

அதன்படி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது புதுக்கோட்டை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் 210 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிமுகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வருமானத்துக்கு அதிமாக சொத்து சேர்த்த வழக்கில் 2021-ல் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்தது. இதுபோன்று சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் மீதும் 10,000 பக்கங்கள் கொண்ட  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கே.பி.அன்பழகன், மனைவி மல்லிகா, மகன் சசிமோகன், சந்திர மோகன் உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகன், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.  வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கே.பி.அன்பழகன் ரூ.45.20 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக கேபி அன்பழகன் சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமைச்சர் இருவரும் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திற்கிற் தாக்கல் செய்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்