இந்தியா முழுவதும் 4ஜி நெட்வொர்க்… டிசிஎஸ்-பிஎஸ்என்எல் இடையே 15,000 கோடி ஒப்பந்தம்.!

இந்தியா முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி நெட்வொர்க் சேவைக்காக, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 15,000 கோடிக்கு ஒப்பந்தம்.

தொலைத்தொடர்பு ஆபரேட்டர் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) இந்திய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) தலைமையிலான நிறுவனத்துக்கு ரூ. 15,000 கோடி மதிப்பிலான கொள்முதல் ஆர்டர்களை (ஏபிஓ) வழங்கியுள்ளது.

இந்தியா முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி நெட்வொர்க் சேவையைப் பயன்படுத்துவதற்காக, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் எனப்படும் டிசிஎஸ் தலைமையிலான கூட்டமைப்பு, பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து ரூ.15,000 கோடி ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.

இந்தியாவில் கடந்த செப்டம்பர் 2022 இல் 5G அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் இந்தியா முழுதும் 5G சேவைகளை தொடங்கியது.

TCS BSNL
TCS BSNL Image ANI
author avatar
Muthu Kumar