30.5 C
Chennai
Saturday, June 10, 2023

மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் பணியிடைநீக்கம்… பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.!

தமிழகப்பள்ளி மாணவர்கள் தேசிய விளையாட்டுப்போட்டிகளுக்கு கலந்து கொள்ளாத விவகாரத்தில்...

புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் நியமனம்… கார்கே.!

புதுச்சேரிக்கு காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் எம்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த...

இனிமேல் பக்காவான ரைடு..அறிமுகமானது ‘ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட்’..! விலை எவ்வளவு தெரியுமா..!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட் ஸ்கூட்டரை...

பங்குச்சந்தை உயர்வு..! சென்செக்ஸ் 61,925 புள்ளிகளாக வர்த்தகம்..!

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 195.43 புள்ளிகள் உயர்ந்து 61,925 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 18,203 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

கடந்த வாரங்களாக சரிவில் வர்த்தகமாகி வந்த இந்தியப் பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. இன்றைய வர்த்தக நாளில் 61,579 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 195.43 புள்ளிகள் அல்லது 0.32% என உயர்ந்து 61,925 புள்ளிகளாக வர்த்தகம் ஆகிறது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 73.65 புள்ளிகள் அல்லது 0.40% சரிந்து 18,277 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 61,729 புள்ளிகளாகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,203 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.

இதற்கிடையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு சந்தையில் முதலீடு செய்து வரும் வேளையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தங்களது அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்து லாபம் பார்த்து வருகின்றனர். கடந்த மாதங்களை விட மே மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் ரூ.18,617 கோடி முதலீடு செய்துள்ளனர்.

சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், டெக் மஹிந்திரா, என்டிபிசி லிமிடெட், இன்ஃபோசிஸ் லிமிடெட், விப்ரோ லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. ஆக்சிஸ் வங்கி, நெஸ்லே இந்தியா, பஜாஜ் ஃபின்சர்வ், பார்தி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ் லிமிடெட் உள்ளிட்ட நிறுவங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.