இரு மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தேதியில் மாற்றம்! தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Elections 2024: அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில சட்டப்பேரவைக்கான வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என நேற்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார்.

Read More – அம்பானி இல்ல திருமணத்தில் திருட்டு..! திருச்சியை சேர்ந்த 5 பேர் அதிரடி கைது

அதன்படி, வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி முடிவடைகிறது. மேலும், மக்களவை தேர்தலோடு சில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளது, இதற்கான தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

Read More – மக்களவை தேர்தல்: குறைந்தபட்ச ஊதிய உயர்வு, சுகாதாரம்..! தொழிலாளர்களுக்கான காங்கிரஸின் 5 வாக்குறுதிகள்

இந்த நிலையில், அருணாச்சல பிரதேசம், சிக்கிமில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சட்டப்பேரவை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4க்கு பதிலாக ஜூன் 2ம் தேதியே எண்ணப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Read More – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9வது முறையாக சம்மன்!!

சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் ஜூன் 2ஆம் தேதி முடிவடைவதால் வாக்கு எண்ணிக்கை தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment