சில்க் சுமிதாவின் வாழ்கை வரலாற்று படம்! ஹீரோயினாக நடித்துள்ளது இவரா?

தமிழ் சினிமாவில் கவர்ச்சியால் ரசிகர்கள் மனதை கட்டி போட்ட நடிகைகளில் ஒருவர் சில்க் சுமிதா. 80ஸ் காலகட்டத்தில் இவர் ஆடிய கவர்ச்சி பாடல்கள் இப்போது இருக்கும் இளைஞர்கள் வரை ரசித்து பார்க்க கூடிய வகையில் இருகிறது. அந்த அளவிற்கு சில்க் சுமிதா இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவருக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

80ஸ், 90ஸ்-களில் அசைக்க முடியாத நடிகையாக வலம்வந்த சில்க் சுமிதாவுக்கு இன்று பிறந்த நாள் தினம். இதனை முன்னிட்டு அவருடைய பாடல்களில் மறக்க முடியாத பாடல்கள் நடித்த படங்களை ரசிகர்கள் நினைவு கூர்ந்து வருகிறார்கள். இதனையடுத்து, ஏற்கனவே சில்க் சுமிதாவின் வாழ்கை வரலாறு படமாக எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

திருமண உறவிலிருந்து வெளியேறுகிறேன்…திரெளபதி நடிகை ஷீலா அறிவிப்பு.!

ஆனால், அந்த படத்தில் சில்க் சுமிதா கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார் என்ற எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், தற்போது இன்று சில்க் சுமிதா பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய வாழ்கை வரலாற்றை தழுவி எடுக்கப்படும் படத்திற்கான அறிவிப்பு படத்தின் தலைப்பு கூடிய மற்ற விவரங்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சில்க் சுமிதாவின் வாழ்கை வரலாற்று படத்தை பிரபல இயக்குனரான ஜெயராம் இயக்கவுள்ளாராம்.  சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் இந்த படத்தில்  ஆஸ்ரேலியவை சேர்ந்த நடிகை சந்திரிகா ரவி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சந்திரிகா ரவி  இந்த படத்திற்கு முன்பு ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் பேய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் , இந்த திரைப்படத்திற்கு ‘சில்க் ஸ்மிதா -தி அன்டோல்ட் ஸ்டோரி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தயாரிப்பாளர் எஸ்.பி. விஜய் தயாரிக்கிறார். இன்று சில்க்ஸ் சுமிதா பிறந்த நாள் என்பதால் இதனை முன்னிட்டு படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த திரைப்படம்  தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.