உலகக்கோப்பையில் ஒரு விக்கெட்டை கூட எடுக்காமல் அதிக ரன்கள் கொடுத்த வீரர்களில் சாஹல் முதலிடம் !

நேற்றைய  போட்டியில் இங்கிலாந்து அணியும் ,இந்திய அணியும் மோதியது .இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது .இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார் .

முதலில் களமிறங்கிய இங்கிலாந்து  50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 337 ரன்கள் குவித்தது. பின்னர் இறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 306 ரன்கள் எடுத்து  31ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது.

இப்போட்டியில் இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 10 ஓவர் வீசி ஒரு விக்கெட்டை கூட எடுக்காமல் 88 ரன்கள் கொடுத்தார்.இப்போட்டியில் அதிக ரன்கள் கொடுத்த வீரர்களில் யுஸ்வேந்திர சாஹல் முதல் இடம் பிடித்தார்.

மேலும் உலகக்கோப்பையில் இந்திய அணி பந்து வீச்சாளர்களில் ஒரு விக்கெட்டை கூட எடுக்காமல் அதிக ரன்கள் கொடுத்த வீரர்களிலும் சாஹல் முதல் இடம் பிடித்தார்.இவருக்கு முன் 2003-ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் ஸ்ரீநாத் ஒரு விக்கெட்டை கூட எடுக்காமல் 87 ரன்கள் கொடுத்து இருந்தார்.

சாஹல் – 88 vs இங்கிலாந்து  (2019) *
ஸ்ரீநாத் – 87 vs ஆஸ்திரேலியா   (2003)

author avatar
murugan